/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் 632 மனுக்கள் ஏற்பு'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் 632 மனுக்கள் ஏற்பு
'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் 632 மனுக்கள் ஏற்பு
'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் 632 மனுக்கள் ஏற்பு
'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் 632 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜன 11, 2024 12:49 AM
காஞ்சிபுரம்:வாலாஜாபாத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில், மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.
இந்த முகாமிற்கு, வாலாஜாபாத் பேரூராட்சி தி.மு.க., தலைவர் இல்லாமல்லி தலைமை வகித்தார். இம்முகாமில், 304 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், ஒரு மாற்றுத்திறனாளிக்கு நான்குசக்கர வாகனம்; மற்றொருவருக்கு காதுகேட்கும் கருவி; 3 பேருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் என, 5 பேருக்கு நலத் திட்ட உதவிகளை உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் வழங்கினார். இந்த முகாமில், வாலாஜாபாத் பேரூராட்சி தி.மு.க., துணைத் தலைவர் சுரேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டு, மக்களுக்கான 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சி, ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று நடந்தது.
இதில், 15க்கும் மேற்பட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டனர்.
நேற்று நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளில் பொதுமக்களிடம் இருந்து 328 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.