/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் துவக்கம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் துவக்கம்
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் துவக்கம்
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் துவக்கம்
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் துவக்கம்
ADDED : மே 20, 2025 08:41 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தின்கீழ், உத்திரமேரூர் வட்டாரத்தில் உள்ள 73 ஊராட்சிகளில், 186 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. மேலும், அங்கன்வாடி மையங்கள் வாயிலாக, 6 வயது வரை குழந்தைகளின் ஊட்டச்சத்து, முன்பருவ கல்வி கற்பித்தல், கர்ப்பிணியர் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை விண்ணப்பிக்க, ஆதார் சேவை மையம் நேற்று துவக்கப்பட்டது.
இந்த ஆதார் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி பயன் பெறுமாறு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.