/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/திருநங்கை கள்ளக்காதலியுடன் வாலிபர் துாக்கிட்டு தற்கொலைதிருநங்கை கள்ளக்காதலியுடன் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
திருநங்கை கள்ளக்காதலியுடன் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
திருநங்கை கள்ளக்காதலியுடன் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
திருநங்கை கள்ளக்காதலியுடன் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜன 04, 2024 10:28 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த பழவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு, 22. இவருக்கும், விமலா என்பவருக்கும், ஒன்பது மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சரத் என்கிற சரளா, 19, என்ற திருநங்கையுடன், ராமுவுக்கு பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்துள்ளனர். இதை அறிந்த விமலா, ராமுவை கண்டித்தார்.
இதனால், மனமுடைந்த ராமு மற்றும் திருநங்கை சரளா ஆகியோர், பாலாற்று பகுதியில் இருந்த மரத்தில் துாக்கிட்டு, நேற்று தற்கொலை செய்து கொண்டனர்.
அவ்வழியாக, பாலாற்றில் மீன் பிடிக்க சென்றவர்கள், மரத்தில் இருவர் துாக்கிட்டு இருப்பதை கண்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரித்து வருகின்றனர்.