/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சியில் ஒரே நாளில் ஒரு வாகன ஓட்டிக்கு ஒரே குற்றத்திற்காக 2 முறை அபராதம் விதிப்பு காஞ்சியில் ஒரே நாளில் ஒரு வாகன ஓட்டிக்கு ஒரே குற்றத்திற்காக 2 முறை அபராதம் விதிப்பு
காஞ்சியில் ஒரே நாளில் ஒரு வாகன ஓட்டிக்கு ஒரே குற்றத்திற்காக 2 முறை அபராதம் விதிப்பு
காஞ்சியில் ஒரே நாளில் ஒரு வாகன ஓட்டிக்கு ஒரே குற்றத்திற்காக 2 முறை அபராதம் விதிப்பு
காஞ்சியில் ஒரே நாளில் ஒரு வாகன ஓட்டிக்கு ஒரே குற்றத்திற்காக 2 முறை அபராதம் விதிப்பு
ADDED : மார் 15, 2025 06:55 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகரில், மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம், பூக்கடை சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணி மற்றும் விதிமீறும் வாகனங்களை அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று, பூக்கடை சத்திரம் பகுதியில், காஞ்சிபுரம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, கிராமப்புற வாகன ஓட்டி ஒருவர், 'ஹெல்மெட்' என, அழைக்கப்படும், தலைகவசம் இன்றி இருவர் சென்றுள்ளனர்.
வாகன சோதனையின் போது, அந்த வாகன ஓட்டியிடம் மூவர் பயணித்தாகவும், ஹெல்மெட் அணியவில்லை என, தலா, 1,000 ரூபாய் என, 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
அதேபோல, சற்று துாரம் தள்ளி ஜவஹர்லால் தெரு என அழைக்கப்படும் கம்மாளத் தெருவில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில், அதே வாகன ஓட்டிக்கு ஹெல்மெட் அணியாமல் சென்றார் என, ஓடும் இருசக்கர வாகனத்தை புகைப்படம் எடுத்து, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
ஒரே நாளில் ஒரே வாகன ஓட்டி 3,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் போக்குவரத்து போலீசாரின் அடாவடியால் கிராமப்புற வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது நகர்ப்புற வாகன ஓட்டிகளும் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடும் போது, ஹெல்மெட் இன்றி செல்லும் வாகன ஓட்டி அபராதம் செலுத்த நேரிடுகிறது. அதே வாகன ஓட்டி மற்றொரு இடத்தில் நடக்கும் வாகன சோதனையின் போது அபராதம் செலுத்த நேர்த்தால், ஏற்கனவே அபராதம் செலுத்திய ரசீது காண்பிக்கும் போது, அபாராதம் விதிப்பதை போலீசார் தவிர்க்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.