/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கூடைப்பந்து பயிற்சிக்கு சென்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலிகூடைப்பந்து பயிற்சிக்கு சென்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி
கூடைப்பந்து பயிற்சிக்கு சென்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி
கூடைப்பந்து பயிற்சிக்கு சென்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி
கூடைப்பந்து பயிற்சிக்கு சென்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலி
ADDED : பிப் 12, 2024 06:11 AM
சைதாப்பேட்டை: மயிலாப்பூரைச் சேர்ந்த டாக்டர் தம்பதி தயாளசுந்தரம் - கீதாபிரியா. இவர்களது மகன் ரியான் ஆதவ், 11; தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தார்.
ரியான் ஆதவ், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் சில மாதங்களாக, கூடைப்பந்து பயிற்சிக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை பயிற்சி முடிந்த பின், அருகில் உள்ள கம்பத்தில் சாய்ந்து நின்றுள்ளார்.
அப்போது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். சிறுவனை மீட்ட பயிற்சியாளர்கள், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சை அளித்து, தனியார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.