Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/10ம் வகுப்பு தேர்வு முடிவில் 32ல் இருந்து 16க்கு முன்னேற்றம் 94.85 சதவீதம் பேர் தேர்ச்சி; 32 அரசு பள்ளிகள் சென்டம்

10ம் வகுப்பு தேர்வு முடிவில் 32ல் இருந்து 16க்கு முன்னேற்றம் 94.85 சதவீதம் பேர் தேர்ச்சி; 32 அரசு பள்ளிகள் சென்டம்

10ம் வகுப்பு தேர்வு முடிவில் 32ல் இருந்து 16க்கு முன்னேற்றம் 94.85 சதவீதம் பேர் தேர்ச்சி; 32 அரசு பள்ளிகள் சென்டம்

10ம் வகுப்பு தேர்வு முடிவில் 32ல் இருந்து 16க்கு முன்னேற்றம் 94.85 சதவீதம் பேர் தேர்ச்சி; 32 அரசு பள்ளிகள் சென்டம்

ADDED : மே 16, 2025 09:01 PM


Google News
காஞ்சிபுரம்: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 94.85 சதவீதம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு 32வது இடத்தில் இருந்தது இம்முறை 16வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 32 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழகம் முழுதும் நேற்று வெளியிடப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாணவ - மாணவியர் தங்களின் தேர்வு முடிவுகள், மதிப்பெண் விபரங்களை மொபைல் போன்களில் ஆர்வத்துடன் பார்த்து தெரிந்து கொண்டனர்.

மாவட்டத்தில், 183 பள்ளிகளைச் சேர்ந்த, 7,748 மாணவர், 7,450 மாணவியர் என, 15,198 பேர் தேர்வில் பங்கேற்றனர். இதில், 7,207 மாணவர், 7208 மாணவியர் என, 14,415 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 94.85 சதவீதமாகும். கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 87.55 ஆக இருந்தது. கடந்தாண்டை காட்டிலும், 7.3 சதவீதம் இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் அதிகமாகி உள்ளது.

மாணவர்கள் 93.02 சதவீதமும், மாணவியர் 96.75 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களை காட்டிலும், 3.73 சதவீதம் மாணவியர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மாவட்ட வாரியான தர வரிசையில், 32வது இடத்தை கடந்தாண்டு பெற்றது. இந்தாண்டு, தேர்ச்சி சதவீதம் அதிகமானதால், தமிழக அளவில் 16வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அரசு பள்ளிகளை பொறுத்தவரையில், 100 பள்ளிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் பங்கேற்றது. இதில், 8,341 மாணவ - மாணவியர் தேர்வில் பங்கேற்றதில், 7,787 மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 93.36 சதவீத தேர்ச்சியாகும்.

100 சதவீத தேர்ச்சி


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 183 பள்ளிகள் பத்தாம் வகுப்பில் பங்கேற்றன. இதில், 32 அரசு பள்ளிகள் உட்பட 77 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. கடந்தாண்டு இரண்டு அரசு பள்ளிகள் மட்டுமே, 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 32 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

பிளஸ் 1 தேர்வில்...


பிளஸ் 1 தேர்வுக்கான முடிவுகளும் நேற்று வெளியிடப்பட்டன. பிளஸ் 1 தேர்வில், காஞ்சிபுரம் மாவட்டம், 88.18 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. மாவட்ட அளவில், அரசு, தனியார் என, 108 பள்ளிகள், பிளஸ் 1 தேர்வில் பங்கேற்றன. இதில், 14,549 மாணவ - மாணவியர் தேர்வெழுதினர். இதில், 12,549 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழக அளவில் கடந்தாண்டு 33வது இடத்தில் இருந்த காஞ்சிபுரம் மாவட்டம், 34வது இடத்தை இம்முறை பிடித்துள்ளது. தேர்வில் பங்கேற்ற பள்ளிகளில், 21 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

அரசு பள்ளிகளை பொறுத்தவரையில், 7,813 மாணவ - மாணவியர் தேர்வெழுதினர். இதில், 6,425 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 82.23 சதவீதமாகும். இரு அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

பங்கேற்ற பள்ளிகள் விபரம்


பள்ளி எண்ணிக்கைஅரசு பள்ளிகள் 89நகராட்சி பள்ளிகள் 4ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் 6சமூக நலத்துறை பள்ளிகள் 1அரசு உதவி பெறும் பள்ளிகள் 19தனியார் பள்ளிகள் 60சுய நிதி பள்ளிகள் 4மொத்த பள்ளிகள் 183



பாட வாரியான தேர்ச்சி சதவீத விபரம்


பாடம் தேர்வெழுதியோர் தேர்ச்சி பெற்றோர் சதவீதம்
தமிழ் 15,198 14,883 97.93
ஆங்கிலம் 15,198 15,111 99.43
கணிதம் 15,198 14,788 97.30
அறிவியல் 15,198 14,969 98.49
சமூக அறிவியல் 15,198 15,060 99.09



பள்ளி வாரியாக தேர்ச்சி சதவீதம்


பள்ளி தேர்வெழுதியோர்- தேர்ச்சி பெற்றறோர் - சதவீதம்
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் 294 283 96.26
அரசு உதவி பெறும் பள்ளிகள் 873 798 91.41
அரசு பள்ளிகள் 7,801 7,266 93.14
நகராட்சி பள்ளிகள் 241 237 98.34
உதவி பெறும் பள்ளிகள் - பகுதி 1,003 942 93.92
சமூக நலத்துறை பள்ளிகள் 5 - 1 - 20.00
தனியார் பள்ளிகள் 4,981 4,888 98.12
மொத்தம் 15,198 14,415 94.85-----------------------------







      Our Apps Available On




      Dinamalar

      Follow us