/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/தாய்லாந்து விமானத்தில் வந்த ரூ.7 கோடி கஞ்சா பறிமுதல்தாய்லாந்து விமானத்தில் வந்த ரூ.7 கோடி கஞ்சா பறிமுதல்
தாய்லாந்து விமானத்தில் வந்த ரூ.7 கோடி கஞ்சா பறிமுதல்
தாய்லாந்து விமானத்தில் வந்த ரூ.7 கோடி கஞ்சா பறிமுதல்
தாய்லாந்து விமானத்தில் வந்த ரூ.7 கோடி கஞ்சா பறிமுதல்
ADDED : பிப் 23, 2024 11:48 PM

சென்னை:தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு, நேற்று அதிகாலை 'தாய் ஏர்வேஸ்' பயணியர் விமானம் வந்தது.
அதில் வந்த பயணியரில் ஒருவர் போதைப்பொருள் கடத்தி வருவதாக, டில்லி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, தாய்லாந்து சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும், அந்த சூட்கேசில் மர்ம நபர்கள் அடையாளம் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு, நேற்று முன்தினம் அதிகாலை சென்னை வந்த விமானத்தையும், சூட்கேஸ்வரும் கன்வேயர் பெல்ட்டையும் தீவிரமாக கண்காணித்தனர்.
இந்த நிலையில், வெள்ளை சாக்பீசால் அடையாளப்படுத்தப்பட்டிருந்த சூட்கேசை யாரும் எடுக்காததால், அதிகாரிகள் அதை திறந்து பார்த்தனர்.
அதில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான 'ஹைட்ரோ போனிக்' எனும் உயர்ரக கஞ்சா, 14 கிலோ இருந்ததை கண்டறிந்தனர்.
அதை பறிமுதல் செய்து விசாரித்ததில், கஞ்சா கடத்தியவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து, அவரை தேடி வருகின்றனர்.