/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சிபுரத்தில் 59 ஊராட்சி செயலர் பணியிடம் காலி!: வளர்ச்சி திட்ட பணிகள் கவனிப்பதில் சுணக்கம்காஞ்சிபுரத்தில் 59 ஊராட்சி செயலர் பணியிடம் காலி!: வளர்ச்சி திட்ட பணிகள் கவனிப்பதில் சுணக்கம்
காஞ்சிபுரத்தில் 59 ஊராட்சி செயலர் பணியிடம் காலி!: வளர்ச்சி திட்ட பணிகள் கவனிப்பதில் சுணக்கம்
காஞ்சிபுரத்தில் 59 ஊராட்சி செயலர் பணியிடம் காலி!: வளர்ச்சி திட்ட பணிகள் கவனிப்பதில் சுணக்கம்
காஞ்சிபுரத்தில் 59 ஊராட்சி செயலர் பணியிடம் காலி!: வளர்ச்சி திட்ட பணிகள் கவனிப்பதில் சுணக்கம்
ADDED : ஜூலை 08, 2024 05:37 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 59 ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வளர்ச்சி திட்ட பணிகளில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வரியினங்களின் ரசீது பெறுவதில், சிக்கல் நீடித்து வருகிறது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிதோறும், தலா ஒரு ஊராட்சி செயலர் பணியிடம், துப்புரவு பணியாளர், மக்கள் நலப் பணியாளர்கள் என, பல்வேறு பணியிடங்கள் உள்ளன.
இதில், வரி இனங்கள் வசூல், குடிநீர், சுகாதாரம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊராட்சியில் இருந்து அரசுக்கு தேவையான புள்ளி விபரங்கள் சமர்ப்பித்தல், மாவட்ட நிர்வாகம் வாயிலாக கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஊராட்சி செயலர்கள் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு, 215 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மீதம், 59 ஊராட்சி செயலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், கிராமங்களில் குடிநீர் பிரச்னை மற்றும் தெரு விளக்கு எரியவில்லை என்றால், சரி செய்யும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு ஊராட்சி செயலரும், மற்றொரு ஊராட்சி நிர்வாகத்தை கூடுதலாக கவனித்து வருகின்றனர்.
இதனால், வரி வசூலிப்பு ரசீது பெறும் பணிகளில் சிக்கல் நீடித்து வருகிறது. எனவே, காலியாக இருக்கும் ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, துறை ரீதியான அலுவலர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஊராட்சி செயலர் ஒருவர் கூறியதாவது:
ஒரு ஊராட்சி செயலருக்கு, மற்றொரு ஊராட்சி கூடுதல் பொறுப்பு அளிக்கும் போது, குடிநீர், தெரு விளக்கு சரி செய்யும் பணிகளில், சற்று தாமதமாக தான் செய்ய முடிகிறது.
இருப்பினும், சரி செய்து விடுகிறோம். அதேபோல, வரியினங்கள் வசூலிக்கும் போது, சர்வர் சரியாக கிடைத்த பின், ஆன்லைன் ரசீது வந்தால் மட்டுமே, பில் எடுத்து கொடுக்க முடிகிறது. சர்வர் தொழில்நுட்ப பிரச்னையால், பில் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காலி பணியிடங்கள் குறித்து, அரசிற்கு தெரிவித்துள்ளோம். அரசு தான், காலி ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில், காலியாக இருக்கும் ஊராட்சிகளில் பணிகள் தொய்வு ஏற்பட்டு விடக்கூடாது' என, கூடுதல் பொறுப்பு அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.