/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/குறைதீர் கூட்டத்தில் 431 பேர் மனு ஏற்புகுறைதீர் கூட்டத்தில் 431 பேர் மனு ஏற்பு
குறைதீர் கூட்டத்தில் 431 பேர் மனு ஏற்பு
குறைதீர் கூட்டத்தில் 431 பேர் மனு ஏற்பு
குறைதீர் கூட்டத்தில் 431 பேர் மனு ஏற்பு
ADDED : ஜூன் 03, 2025 12:52 AM
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், அரசு இடம் ஆக்கிரமிப்பு, ரேஷன் அட்டை, உதவித்தொகை, வேலைவாய்ப்பு என, 431 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
தமிழக அளவில் பலருக்கும், பட்டா வழங்கப்பட்டு வருவதால், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், பட்டா கேட்டு மனு அளிப்பது அதிகரித்து வருகிறது. நேற்றைய கூட்டத்தில் 431 பேர் மனு அளித்ததில், 200 பேர் பட்டா கேட்டும், அது தொடர்பாகவே மனு அளித்துள்ளனர்.