Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ரூ.3,000 லஞ்சம் வாங்கிய ஏட்டுக்கு 4 ஆண்டு சிறை

ரூ.3,000 லஞ்சம் வாங்கிய ஏட்டுக்கு 4 ஆண்டு சிறை

ரூ.3,000 லஞ்சம் வாங்கிய ஏட்டுக்கு 4 ஆண்டு சிறை

ரூ.3,000 லஞ்சம் வாங்கிய ஏட்டுக்கு 4 ஆண்டு சிறை

ADDED : மே 15, 2025 12:41 AM


Google News
காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் அடுத்த, ஆட்டுப்புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். மூன்று லாரிகளை வைத்து மணல் குவாரியில் இருந்து மணலை சென்னைக்கு எடுத்துச் சென்று கட்டுமான பணிகளுக்கு விற்று வந்தார்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது, நெடுஞ்சாலைத் துறை ரோந்து வாகன சிறப்பு எஸ்.ஐ., முனுசாமிக்கு, ஒரு லாரிக்கு மாதம், 1,000 ரூபாய் என, மூன்று லாரிகளுக்கு 3,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என, கேட்டுள்ளார்.

இதுகுறித்து, மோகன், சென்னை நகர பிரிவு - -1 லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தபோது, சிறப்பு எஸ்.ஐ., முனுசாமி, தலைமை காவலர் மதியழகன் ஆகிய இருவரும் கையும் களவுமாக சிக்கினர்.

சென்னை நகர பிரிவு- -- 1 லஞ்ச ஒழிப்பு போலீசார், 2010ம் ஆண்டு வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். வழக்கின் விசாரணை, காஞ்சிபுரம் குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதில், விசாரணை காலத்தில் சிறப்பு எஸ்.ஐ., முனுசாமி இறந்து விட்டார். தலைமை காவலர் மதியழகன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி வசந்தகுமார் தீர்ப்பளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us