ADDED : மே 10, 2025 07:07 PM
காஞ்சிபுரம்:இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை மற்றும் அப்பல்லோ ப்ரோட்டான் கேர் மருத்துவமனை சார்பில், மருத்துவர்களுக்கான கருத்தரங்கம் மற்றும் சர்வதேச செவிலியர் தின விழா சங்க தலைவர் டாக்டர் ரவி தலைமையில் காஞ்சிபுரத்தில் நடந்தது.
காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த 30 செவிலியர்களுக்கு விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
சங்க செயலர் டாக்டர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார் இதில், வாய் வழியாக செய்யப்படும் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் நவின்ஹெட்னே விளக்கினார். மூளையில் மேற்கொள்ளப்படும் நவீன அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் கிருஷ்ணகுமார் கருத்தரங்க உரையாற்றினார்.
இதில், பொருளாளர் டாக்டர் ஞானவேல், முன்னாள் தலைவர் டாக்டர் மனோகரன் உள்ளிட்ட டாக்டர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சங்க செயலர் டாக்டர் முத்துக்குமரன், அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டர் நிர்வாகத்தினர் இணைந்து செய்திருந்தனர்.