/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி அரசு தலைமை மருத்துவமனையில் 3 பேருக்கு கண்விழி மாற்று அறுவை சிகிச்சை காஞ்சி அரசு தலைமை மருத்துவமனையில் 3 பேருக்கு கண்விழி மாற்று அறுவை சிகிச்சை
காஞ்சி அரசு தலைமை மருத்துவமனையில் 3 பேருக்கு கண்விழி மாற்று அறுவை சிகிச்சை
காஞ்சி அரசு தலைமை மருத்துவமனையில் 3 பேருக்கு கண்விழி மாற்று அறுவை சிகிச்சை
காஞ்சி அரசு தலைமை மருத்துவமனையில் 3 பேருக்கு கண்விழி மாற்று அறுவை சிகிச்சை
ADDED : ஜூன் 10, 2025 10:26 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் இயங்கும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பொது மருத்துவம், மகப்பேறு, கண், காது, மூக்கு, மகப்பேறு, அவசர சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு கண் வங்கி துவக்கப்பட்டு, இதுவரை 340 கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளதோடு, மூன்று பேருக்கு கண் விழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கடந்த ஆண்டு, மே 15ம் தேதி கண் துவங்கப்பட்டது. இதில், கடந்த மே மாதம் வரை, 340 கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளது. தானமாக பெறப்பட்ட கண்கள் 24 - 48 மணி நேரத்திற்குள் தகுதியான நோயாளிககு பயன்படுத்தப்பட வேண்டும்.
மேலும், மருத்துவமனையில் கண் விழி மாற்று அறுவை சிகிச்சை வசதியும் துவக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆக., 12ம் தேதி முதல், நடப்பு ஆண்டு ஜன., 25 வரை இதுவரை மூன்று பேருக்கு கண் விழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கண் விழி மாற்று அறுவை சிகிச்சை என்பது சேதமடைந்த கருவிழி, ஆரோக்கியமான நன்கொடையாளர் கருவிழியால், மாற்றப்படும் அறுவை சிகிச்சையாகும். கண் விழி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வயது வரம்பு எதுவும் இல்லை.
கருவிழி பிரச்னையால் மட்டுமே பார்வை இழந்த நோயாளிகளுக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். எனவே, விழித்திரை கோளாறு மற்றும் பார்வை நரம்பு நோய் உள்ளவர்களுக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலாது.
கருவிழி பாதிப்பு உடையவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண் பிரிவில் பரிசோதனை செய்து, கண் மருத்துவ நிபுணர்கள் வாயிலாக கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்யப்படுவோர், அதற்கான முன்பதிவு பதிவேட்டில், பெயர், முகவரி, மொபைல் எண் பதிவு செய்யப்படும்.
கண் தானம் செய்வோரின் ஆரோக்யமான கருவிழி பெறப்பட்டவுடன், பதிவேட்டில் உள்ள பெயர் மூப்பின் அடிப்படையில், நோயாளிகள் அழைக்கப்பட்டு, வார்டில் அனுமதிக்கப்பட்டு, கருவிழி மாற்று அறுவை கிகிச்சை செய்யப்படும்.
இது ஒரு அவசர கால சிகிச்சை அல்ல. பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.