/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூரில் 2.3 செ.மீ., மழை பதிவு உத்திரமேரூரில் 2.3 செ.மீ., மழை பதிவு
உத்திரமேரூரில் 2.3 செ.மீ., மழை பதிவு
உத்திரமேரூரில் 2.3 செ.மீ., மழை பதிவு
உத்திரமேரூரில் 2.3 செ.மீ., மழை பதிவு
ADDED : மே 24, 2025 08:24 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பகலில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி வருவதால், முதியோர், நோயாளிகள், குழந்தைகள் என பல தரப்பினரும் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் நகரில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்ய துவங்கியது. காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் என, மாவட்டம் முழுதும் கனமழை பெய்தது. கனமழை காரணமாக இரவில் குளிர்ச்சி நிலவியது.
மாவட்டம் முழுதும் பெய்த மழையில், உத்திரமேரூரில் 2.3 செ.மீ.,மழையும், ஸ்ரீபெரும்புதுாரில் 1.6 செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 1.0 செ.மீ., காஞ்சிபுரத்தில் 0.5 செ.மீ., வாலாஜாபாத்தில் 0.3 செ.மீ.,மழையும் பதிவாகியுள்ளது.