Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பழவேரி மலையில் பந்துகளாக 2,000 நாட்டு மரவிதைகள் வீச்சு

 பழவேரி மலையில் பந்துகளாக 2,000 நாட்டு மரவிதைகள் வீச்சு

 பழவேரி மலையில் பந்துகளாக 2,000 நாட்டு மரவிதைகள் வீச்சு

 பழவேரி மலையில் பந்துகளாக 2,000 நாட்டு மரவிதைகள் வீச்சு

ADDED : டிச 01, 2025 03:19 AM


Google News
Latest Tamil News
பழவேரி: பழவேரி மலை மீது புதிதாக முருக பெருமான் சன்னிதி அமைக்கப்படுவதை தொடர்ந்து அம்மலையை சுற்றிலும் விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில் நேற்று 2,000 விதை பந்துகள் வீசப்பட்டன.

உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில் பழமையான மலை குன்று உள்ளது.

இம்மலை உச்சி மற்றும் மலையடிவாரங்களில் மனித நாகரிக வளர்ச்சியின் அடையாளங்களான பெருங்கற்கால நினைவு சின்னங்கள் ஏராளமாக இருப்பதை ஏற்கனவே வரலாற்று ஆர்வலர்களால் கண்டறியப்பட்டு உள்ளது.

மேலும், கற்பதுக்கைகள், கற்படை வட்டங்கள், சில இடங்களில் கற்கள் சூழந்த ஆழமான குகைகள் உள்ளதையும் அவர்கள் கண்டறிந்து, அவை 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனவும் அதை பாதுகாக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இம்மலை உச்சியில் கார்த்திகை மாதம், கிருத்திகை நாளில், தீபவிளக்கு ஏற்றி முன்னோர் காலந்தொட்டு வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்த இடத்தில் முருகன் கோவில் கட்டி வழிபட அப்பகுதி மக்கள் கடந்த ஆண்டில் தீர்மானித்து தற்போது கருவறை மற்றும் மகா மண்டபத்திற்கான கட்டட பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்நிலையில், பழவேரி முருகன் கோவில் அமையும் மலை பகுதியை சுற்றிலும் விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில் மகிழ மரம், நாவல், மந்தாரை, வேம்பு உள்ளிட்ட நாட்டு மரங்களுக்கான 2,000 விதை பந்துகள் நேற்று வீசப்பட்டன.

தற்போது பருவமழைக்காலம் என்பதால் விதைகள் வேர் விட்டு மரமாக வளர இக்காலம் உகந்ததாக இருக்கும் எனவும், இதுபோன்ற விதை பந்துகள் தங்கள் பகுதிகளில் விதைக்க 88702 81261 என்ற மொபைல் போன் எண்ணிற்கு தங்களை அழைக்குமாறு விதைகள் தன்னார்வ அமைப்பு நிர்வாகி சரண் தெரிவித்துஉள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us