/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 18 சவரன், பணம் 'மாஜி' ராணுவ வீரர் வீட்டில் திருட்டு 18 சவரன், பணம் 'மாஜி' ராணுவ வீரர் வீட்டில் திருட்டு
18 சவரன், பணம் 'மாஜி' ராணுவ வீரர் வீட்டில் திருட்டு
18 சவரன், பணம் 'மாஜி' ராணுவ வீரர் வீட்டில் திருட்டு
18 சவரன், பணம் 'மாஜி' ராணுவ வீரர் வீட்டில் திருட்டு
ADDED : மார் 22, 2025 12:37 AM
படப்பை, படப்பை அடுத்த கரசங்கால் ஊராட்சி, மல்லீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னசாமி, 61. இவர், ராணுவத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர், தன் மனைவி பாண்டியம்மாளுடன், கடந்த பிப்., 17ம் தேதி சொந்த ஊரான தேனிக்கு சென்றிருந்தார்.
நேற்று காலை , கரசங்காலில் உள்ள தன் வீட்டிற்கு சின்னசாமி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 18 சவரன் நகை, 1.50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மணிமங்கலம் போலீசார், அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி பகுதிகளை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.