Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 1.16 லட்சம் கால்நடைகளுக்கு இன்று முதல் அம்மை நோய் தடுப்பூசி

1.16 லட்சம் கால்நடைகளுக்கு இன்று முதல் அம்மை நோய் தடுப்பூசி

1.16 லட்சம் கால்நடைகளுக்கு இன்று முதல் அம்மை நோய் தடுப்பூசி

1.16 லட்சம் கால்நடைகளுக்கு இன்று முதல் அம்மை நோய் தடுப்பூசி

ADDED : செப் 03, 2025 01:47 AM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1.16 லட்சம் கால்நடைகளுக்கு, இன்று முதல், அம்மை நோய் தடுப்பூசி போடப்படும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கட்டி தோல் நோய் என்பது, வைரஸ் நச்சு கிருமியால் ஏற்படும் அம்மை நோய் சார்ந்தது.

இந்த நோய், பூச்சிக் கடி மூலம் பரவுகிறது. இந்நோய் தாக்கிய மாடுகளின் தோலின் மேல் கட்டிகள் தோன்றும். எனவே, கால்நடைகளை தொற்று நோயிலிருந்து காப்பாற்ற, தடுப்பூசி போடுவது அவசியமாகிறது.

இந்த நோயால், தீவனம் சரியாக உட்கொள்ளாமல் உடல் எடை குறைந்து காணப்படும். மேலும், காயங்களால் மாட்டின் தோல் முற்றிலும் பாதிப்படையும்.

இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, ஒரு லட்சத்து 16,700 கால்நடைகளுக்கு, அம்மை நோய் தடுப்பூசி போடும் பணி, இன்று முதல், இம்மாதம் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது

கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருமைகள், எருதுகள் மற்றும் நான்கு மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு, அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மூலம் தடுப்பூசி போட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us