/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கழிவுநீர் கலந்த குடிநீர் பருகிய 10 பேருக்கு வயிற்றுப் போக்குகழிவுநீர் கலந்த குடிநீர் பருகிய 10 பேருக்கு வயிற்றுப் போக்கு
கழிவுநீர் கலந்த குடிநீர் பருகிய 10 பேருக்கு வயிற்றுப் போக்கு
கழிவுநீர் கலந்த குடிநீர் பருகிய 10 பேருக்கு வயிற்றுப் போக்கு
கழிவுநீர் கலந்த குடிநீர் பருகிய 10 பேருக்கு வயிற்றுப் போக்கு
ADDED : ஜன 03, 2024 12:31 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த தோமூரில் கழிவு நீர் கலந்த குடிநீரை பருகிய 10க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு காரணமாக, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் தோமூர் ஊராட்சியில் வசிப்போருக்கு, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை, குடிநீர் பைப் லைன் பகுதியில் கசிவு ஏற்பட்டு, குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலந்த குடிநீரை பருகிய அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர், பெரியோர் என, 10க்கும் மேற்பட்டோருக்கு திடீர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட அனைவரும், உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்ததும், குடிநீர் பைப் கசிவு ஏற்பட்டு கழிவுநீர் கலந்த இடங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், அத்தகைய கசிவை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வயிற்றுப்போக்கை தடுக்க, மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் வீடு வீடாக சென்று, பாதிப்புக்கு உள்ளானோருக்கு மருந்து மாத்திரைகளை சுகாதாரத்துறையின் அளித்தனர். அனைத்து சாலைகளிலும் துாய்மை பணியாளர்கள் பிளீச்சிங் பவுடர் தெளித்தனர்.
கசிவை சரி செய்யும் வரை பைப் லைன் மூலமாக வரும் குடிநீரை யாரும் பருக வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
பொதுமக்களுக்கு லாரிகள் மூலமாக குடிநீர் வனியோகம் செய்யப்பட்டு வருகிறது.