/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/குன்றத்துார் பள்ளியில் 10 கேமரா பொருத்தம்குன்றத்துார் பள்ளியில் 10 கேமரா பொருத்தம்
குன்றத்துார் பள்ளியில் 10 கேமரா பொருத்தம்
குன்றத்துார் பள்ளியில் 10 கேமரா பொருத்தம்
குன்றத்துார் பள்ளியில் 10 கேமரா பொருத்தம்
ADDED : ஜன 02, 2024 08:52 PM
குன்றத்துார்:குன்றத்துார் அரசு பள்ளி வளாகத்தில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளன.
குன்றத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், குன்றத்துார் சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 1,400 மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பள்ளியின் மதில் சுவர் வழியாக உள்ளே செல்லும் மர்ம நபர்கள் மது அருந்தி பாட்டில்களை உடைத்து செல்கின்றனர்.
இதையடுத்து, பள்ளி வளாகத்தை கண்காணிக்கும் வகையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், 1 லட்சம் ரூபாய் மதிப்பில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப் பட்டுள்ளது.