ADDED : ஜூலை 21, 2024 06:32 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, தனியார் வேலை வாய்ப்பு முகாமை நேற்று நடத்தியது. வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் அருணகிரி தலைமை வகித்தார்.முகாமில் 34 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.
முகாமில் பங்கேற்ற 322 பேர்களில், 51 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.