ADDED : ஜூன் 28, 2024 10:38 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் நாள் முகாம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.
இம்முகாமில், ஒரு பயனாளிக்கு 9,060 மதிப்பிலான மூன்று சக்கர வாகனத்தை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். மேலும், எட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு, தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானதற்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.