/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மணிமேகலை விருது பெற மகளிர் விண்ணப்பிக்கலாம் மணிமேகலை விருது பெற மகளிர் விண்ணப்பிக்கலாம்
மணிமேகலை விருது பெற மகளிர் விண்ணப்பிக்கலாம்
மணிமேகலை விருது பெற மகளிர் விண்ணப்பிக்கலாம்
மணிமேகலை விருது பெற மகளிர் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 25, 2024 11:45 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியோர்களுக்கு மணிமேகலை விருது வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.
மணிமேகலை விருது பெற, காஞ்சிபுரம் மாவட்டம், வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகங்கள் மற்றும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் நாளை விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.