/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மது போதையில் கணவர் தகராறு குத்தி கொன்ற பெண் கைது மது போதையில் கணவர் தகராறு குத்தி கொன்ற பெண் கைது
மது போதையில் கணவர் தகராறு குத்தி கொன்ற பெண் கைது
மது போதையில் கணவர் தகராறு குத்தி கொன்ற பெண் கைது
மது போதையில் கணவர் தகராறு குத்தி கொன்ற பெண் கைது
ADDED : ஜூன் 04, 2024 05:34 AM

பூந்தமல்லி : பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, யமுனா நகரை சேர்ந்தவர் சீனிவாசன், 35. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மங்கள லட்சுமி, 30. பூந்தமல்லி காவல் நிலையத்தில், ஊர் காவல் படையில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், சீனிவாசன் மது போதைக்கு அடிமையாகி, தினமும் குடித்து விட்டு வந்து மனைவி மங்கள லட்சுமியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் சீனிவாசன் மீண்டும் தகராறு செய்துள்ளார். இதனால், கோபமடைந்த மங்கள லட்சுமி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சீனிவாசன் வயிற்றில் குத்தினார். பலத்த காயமடைந்த சீனிவாசனை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சீனிவாசன் இறந்தார்.
நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மங்கள லட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.