/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அவமானத்தால் கணவர் சாவு மனைவியின் காதலன் கைது அவமானத்தால் கணவர் சாவு மனைவியின் காதலன் கைது
அவமானத்தால் கணவர் சாவு மனைவியின் காதலன் கைது
அவமானத்தால் கணவர் சாவு மனைவியின் காதலன் கைது
அவமானத்தால் கணவர் சாவு மனைவியின் காதலன் கைது
ADDED : ஜூன் 19, 2024 11:46 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த, பெருநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார், 30. ஆட்டோ டிரைவர். இவர், ஆறு ஆண்டுகளுக்கு முன், ஜெயசத்யா, 26, என்பவரை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு 5, 3 மற்றும் 1 வயது என, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமாரின் நண்பரான குறளரசன், 30, என்பவருடன் ஜெயசத்யாவிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராம்குமார் வீட்டில் இல்லாத நேரங்களில், குறளரசன் மற்றும் ஜெயசத்யா இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இருவரும் நெருக்கமாக இருந்ததை குறளரசன் தன் மொபைல் போனில் பதிவு செய்து வைத்துள்ளார். அவ்வாறான சில படங்களை கடந்த மாதம் குறளரசன் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராம்குமார், இதுகுறித்து குறளரசனிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது பல பேர் மத்தியில் குறளரசனால், ராம்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மனைவியின் கள்ளத்தொடர்பு மற்றும் குறளரசன் தன்னை தாக்கியதால் ஏற்பட்ட அவமானம் போன்றவற்றால் ராம்குமார் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி, தன் வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் ராம்குமார் துாக்கிட்டு கொண்டார். இதைக் கண்ட அப்பகுதியினர், அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த ராம்குமார், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதுகுறித்து, ராம்குமாரின் தந்தை குப்பன் அளித்த புகாரின்படி, பெருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே, ராம்குமாரின் மரணத்திற்கு காரணமான குறளரசனை கைது செய்தால் மட்டுமே ராம்குமார் உடலை பெறுவோம் என, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பெருநகர் போலீசார் நேற்று குறளரசனை கைது செய்து, உத்திரமேரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர். அதை தொடர்ந்து ராம்குமார் உடலை பெற்று அவரது குடும்பத்தினர் நேற்று அடக்கம் செய்தனர்.