/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ படப்பையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிப்பது எப்போது? படப்பையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிப்பது எப்போது?
படப்பையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிப்பது எப்போது?
படப்பையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிப்பது எப்போது?
படப்பையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிப்பது எப்போது?
ADDED : ஜூன் 28, 2024 10:42 PM
படப்பை:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்த சாலையில், படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, 2022 ஜனவரியில் துவங்கி, தற்போது வரை மந்தகதியில் நடக்கிறது.
பாலம் கட்டுமான பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டதால், சாலை குறுகலாகி உள்ளது. இதனால், வழக்கத்தைவிட இரு மடங்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.
இதனால், கட்டுமான பகுதியை ஒட்டியிருந்த பேருந்து நிறுத்தம், வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. மேலும், கனரக வாகனங்கள் இந்த வழியே செல்ல, ஒரகடம் போலீசார் தடை விதித்தனர்.
ஓரிரு நாட்கள் கடைபிடிக்கப்பட்ட நிலையில், பாலம் கட்டுமான பகுதி வழியாகவே கனரக வாகனங்கள் செல்வதால், 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில், கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
நெரிசலுக்கு தீர்வு காண, படப்பை பஜாரில் பாலம் கட்டுமான பணி முடியும் வரை, காலை 8:00 முதல் 10:00 மணி வரை, மாலை 6:00 முதல் 8:00 மணி வரை, கனரக வாகனங்கள் நுழைய, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை கறாராக கடைபிடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.