ADDED : ஜூன் 21, 2024 09:36 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நேற்று திருநங்கையருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
இதில், காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தலைமை வகித்தார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராகபங்கேற்றார்.
இந்த முகாமில் ஏழு திருநங்கையருக்கு மாநில அடையாள அட்டை, 12 திருநங்கையருக்கு தேசிய அடையாள அட்டை, 12 திருநங்கையருக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.