Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ விசைத்தறி சேலைகளை கைத்தறி சேலை என கூறி விற்போர் அதிகரிப்பு ஆய்வு பணிகள் சுணக்கம் என நெசவாள்கள் புகார்

விசைத்தறி சேலைகளை கைத்தறி சேலை என கூறி விற்போர் அதிகரிப்பு ஆய்வு பணிகள் சுணக்கம் என நெசவாள்கள் புகார்

விசைத்தறி சேலைகளை கைத்தறி சேலை என கூறி விற்போர் அதிகரிப்பு ஆய்வு பணிகள் சுணக்கம் என நெசவாள்கள் புகார்

விசைத்தறி சேலைகளை கைத்தறி சேலை என கூறி விற்போர் அதிகரிப்பு ஆய்வு பணிகள் சுணக்கம் என நெசவாள்கள் புகார்

ADDED : மார் 13, 2025 10:15 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் நெய்யப்படும் பட்டு சேலைகள் உலக புகழ் பெற்றவை. கைகளால் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டு சேலைகள், மிகுந்த வேலைபாடுகளுடன் இருப்பதால், இச்சேலைகள் இந்திய திருமணங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது.

இதற்காக, காஞ்சிபுரம் நகரில் பட்டு சேலை வாங்க, தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் காஞ்சிபுரம் வந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் பட்டு சேலை வாங்கி செல்கின்றனர்.

அவ்வாறு வாங்கும் சேலைகள் பல, கைகளால் நெய்யப்படாமல், இயந்திரங்களால் உற்பத்தி செய்யப்பட்ட சேலைகளாக இருப்பதாக ஏராளமான புகார்கள் வந்தபடி உள்ளன. இதனால், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசால், 1985-ம் ஆண்டு கைத்தறிரக ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டு 1998 முதல், 11 ரகங்கள் கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.

கோர்வை உள்ளிட்ட கைத்தறி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தை மீறிய செயலாக பார்க்கப்படுகிறது.

இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி, விற்பனை செய்வதை கண்காணிக்க கைத்தறி ஆணையரால் சரக வாரியாக பறக்கும் படைகள், 2023ல் அமைக்கப்பட்டது.

ஆய்வின்போது கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர்கள் மீது காவல் துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என, கைத்தறி துறையினர் தெரிவித்தனர்.

அதன்பின், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால், போதிய நடவடிக்கை இல்லாததால், விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட சேலைகள் விற்பனை, தனியார் கடைகளில் சக்கை போடு போடுவதாக புகார் எழுந்துள்ளது.

ஆய்வு பணிகளில் சுணக்கம் காட்டிய கைத்தறி துறை அதிகாரிகள், விசைத்தறி சேலைகளை, கைத்தறி சேலைகள் என, விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நெசவாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us