/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில் 2ம் கட்ட கலந்தாய்வு 26ல் துவக்கம் உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில் 2ம் கட்ட கலந்தாய்வு 26ல் துவக்கம்
உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில் 2ம் கட்ட கலந்தாய்வு 26ல் துவக்கம்
உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில் 2ம் கட்ட கலந்தாய்வு 26ல் துவக்கம்
உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில் 2ம் கட்ட கலந்தாய்வு 26ல் துவக்கம்
ADDED : ஜூன் 21, 2024 09:36 PM
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024 - 25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும் 26ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர் முனைவர் சுகுமாரன் வெளியிட்டசெய்திக் குறிப்பு:
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024- - 25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு, கடந்த 12ம் தேதி துவங்கியது. இதில், 231 மாணவ- - மாணவியர் சேர்ந்தனர்.
மீதமுள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும் 26ல் துவங்கி 28 வரை நடைபெற உள்ளது. இதில், பி.சி., பி.சி.எம்., - முஸ்லிம், எஸ்.சி.ஏ., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த மாணவ - -மாணவியர் அனைவரும் பங்கேற்கலாம்.
ஜூன் 28ம் தேதி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தகுதி மதிப்பெண் 220க்கு மேல், ஆதிதிராவிட வகுப்பினரின் தகுதி மதிப்பெண் 225க்கு மேல், மற்ற வகுப்பினர் பிரிவில் விண்ணப்பித்த அனைவரும் பங்கேற்கலாம்.
வரும் 29ம் தேதி பி.காம்மற்றும் பி.ஏ., பொருளி யியல் பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில், பி.ஏ., பொருளியல் பாடத்தில் சேர, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மாணவ - -மாணவியருக்கு குறைந்தபட்ச மதிப்பெண் முறையே 242, 244 ஆகும். பிற வகுப்பினர் பிரிவில் விண்ணப்பித்த அனைவரும் பங்கேற்கலாம்.
ஜூன் 30ம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிது. பி.ஏ., ஆங்கிலப் படிப்பில் சேர விரும்பும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மாணவ - மாணவியருக்கு தகுதி மதிப்பெண்ணாக ஆங்கில பாடத்தில், 41 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
பிற வகுப்பினர் பிரிவில் விண்ணப்பித்த மாணவ - மாணவியர் அனைவரும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, www.gascuthiramerur.ac.in என்ற கல்லுாரியின் இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.