/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூர் கழிப்பறை 'கலீஜ்' சீரமைக்க வலியுறுத்தல் உத்திரமேரூர் கழிப்பறை 'கலீஜ்' சீரமைக்க வலியுறுத்தல்
உத்திரமேரூர் கழிப்பறை 'கலீஜ்' சீரமைக்க வலியுறுத்தல்
உத்திரமேரூர் கழிப்பறை 'கலீஜ்' சீரமைக்க வலியுறுத்தல்
உத்திரமேரூர் கழிப்பறை 'கலீஜ்' சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 19, 2024 11:43 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, வண்ணாரகுளம் பகுதியில், அப்பகுதியினர் இயற்கை உபாதை கழிப்பதற்காக, துாய்மை இந்தியா திட்டம் சார்பில், 2017 - 18ல் சமுதாய கழிப்பறை கட்டப்பட்டது. அப்பகுதியினர் கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், ஆண்கள் கழிப்பறை பயன்படுத்த முடியாமல் நிரம்பி வழிகிறது.
அதேபோல, கழிப்பறையின் கதவு மூட முடியாத நிலையிலும், கழிப்பறையை பயன்படுத்த பக்கெட் இல்லாமல், துர்நாற்றம் வீசுவதால், கழிப்பறையை பகுதியினர் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, சமுதாய கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் சுத்தம்செய்து, முறையாக பராமரிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.