/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கால்வாயில் தேங்கிய கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு கால்வாயில் தேங்கிய கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
கால்வாயில் தேங்கிய கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
கால்வாயில் தேங்கிய கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
கால்வாயில் தேங்கிய கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூன் 08, 2024 04:29 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சி, வெங்கடேச பாளையம், ஹைதர்பட்டரை ஜன்டா தெருவில், வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இப்பகுதியினர் வீட்டில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை என, கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், நாளுக்கு நாள் கொசு தொல்லையும் அதிகரித்துள்ளதால், இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது.
எனவே, கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்கி, கழிவுநீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.