/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'யு - 14' கிரிக்கெட் வீரரா? டி.என்.சி.ஏ., அழைப்பு! 'யு - 14' கிரிக்கெட் வீரரா? டி.என்.சி.ஏ., அழைப்பு!
'யு - 14' கிரிக்கெட் வீரரா? டி.என்.சி.ஏ., அழைப்பு!
'யு - 14' கிரிக்கெட் வீரரா? டி.என்.சி.ஏ., அழைப்பு!
'யு - 14' கிரிக்கெட் வீரரா? டி.என்.சி.ஏ., அழைப்பு!
ADDED : ஜூன் 25, 2024 11:43 PM
சென்னை, கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள, 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு, சிட்டி தேர்வில் பங்கேற்க, டி.என்.சி.ஏ., அழைப்பு விடுத்துள்ளது.
டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 'யு - 14' பிரிவில் சிட்டி தேர்வு போட்டிகள், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கின்றன.
'நேட்ஸ்' விளையாட்டு தேர்வு போட்டிகள், ஜூலை 7 முதல் 10ம் தேதிகள் வரை நடக்கின்றன. தேர்வில் பங்கேற்க, 2010 செப்., 1ம் தேதிக்கு பின் அல்லது 2012 ஆக., 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
ஆர்வமுள்ள சிறுவர்கள், டி.என்.சி.ஏ.,வின் அதிகாரபூர்வமான, www.tnca.in என்ற இணையதளத்தில், இன்று முதல் ஜூலை 2ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.
ஆவண சரிபார்ப்புக்கு பின், வீரர்களை தேர்வு செய்யும் தேதி, விண்ணப்பதாரரின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் என, டி.என்.சி.ஏ., நேற்று தெரிவித்தது.