/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஸ்ரீபெரும்புதுாரில் லாரி கவிழ்ந்து விபத்து ஸ்ரீபெரும்புதுாரில் லாரி கவிழ்ந்து விபத்து
ஸ்ரீபெரும்புதுாரில் லாரி கவிழ்ந்து விபத்து
ஸ்ரீபெரும்புதுாரில் லாரி கவிழ்ந்து விபத்து
ஸ்ரீபெரும்புதுாரில் லாரி கவிழ்ந்து விபத்து
ADDED : ஜூலை 17, 2024 11:53 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- திருவள்ளூர் சாலையில், ஸ்ரீபெரும்புதுார் பக்தவாச்சலம் நகர் பகுதியில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சிறு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதனால், இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, நெமிலி, மண்ணுார் வழியாக திருப்பி விடப்பட்டு, திருவள்ளூர் சென்று வருகின்றன.
இந்த நிலையில், திருவள்ளூரில் இருந்து வந்த லாரி ஒன்று, தடையை மீறி இந்த சாலையில் வந்த போது, சிறுபாலம் கட்டுமான பகுதியில் உள்ள பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது.
இதனால், இவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், இப்பகுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி அவதி அடைந்தனர்.
இதையடுத்து, ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக, லாரி அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து போக்குவரத்து சீரானது.