/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 22 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் 22 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
22 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
22 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
22 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ADDED : ஜூலை 03, 2024 09:44 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிர்வாகக் காரணங்களுக்காக, தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், 24 தாசில்தார்கள் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் வருவாய்த் துறையில் பணியாற்றும் 22 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் கலைச்செல்வி நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு, உடனடியாக பணியில் சேர வேண்டும் எனவும் கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார்.