ADDED : ஆக 02, 2024 09:07 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், வாலாஜாபாத் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை ஆகிய பல்வேறு பிரிவுகளில், இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள் அந்தஸ்தில் பல்வேறு நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில், மூன்று இளநிலை உதவியாளர்கள் மற்றும் ஏழு உதவியாளர்கள் என, 10 பேருக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் ஒதுக்கீடு செய்த பணியிடத்தில் விரைந்து பணியில் சேர வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.