/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நவீன விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நவீன விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
நவீன விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
நவீன விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
நவீன விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஜூன் 24, 2024 05:18 AM
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் ஒன்றியம், காரணை கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், மாடித்தோட்டம் அமைப்பதற்கான விதைகள் வழங்கல் மற்றும் விவசாயிகளுக்கான, நவீன விவசாயம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சோழனுார் மா.ஏழுமலை தலைமை வகித்தார். இயக்குனர்கள் பரசுராமன், வீரராகவன் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இயற்கை விவசாய தன்னார்வலர் நாகராஜன், வீடு மாடித்தோட்டம் அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
விவசாயிகளுக்கு, எளிய முறையில் நவீன விவசாயம் செய்வது குறித்து விவசாய நிலத்தில் நேரடி செயல்முறை விளக்கம் அளித்தார்.