/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ டோல்கேட் மாவடியம்மனுக்கு வரும் 21ல் கூழ்வார்த்தல் விழா டோல்கேட் மாவடியம்மனுக்கு வரும் 21ல் கூழ்வார்த்தல் விழா
டோல்கேட் மாவடியம்மனுக்கு வரும் 21ல் கூழ்வார்த்தல் விழா
டோல்கேட் மாவடியம்மனுக்கு வரும் 21ல் கூழ்வார்த்தல் விழா
டோல்கேட் மாவடியம்மனுக்கு வரும் 21ல் கூழ்வார்த்தல் விழா
ADDED : ஜூலை 02, 2024 09:25 PM
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் டோல்கேட், சேதுராயர் தெருவில், மாவடியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத கூழ்வார்த்தல் விழா, வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி வரும் 19ம் தேதி, காலை 7:00 மணிக்கு பால்குட ஊர்வலமும், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்வு நடக்கிறது.
வரும் 21ம் தேதி, காலை 10:00 மணிக்கு அம்மன் கரகம் வீதியுலாவும், மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும்,. இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் மாவடி அம்மன் முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.
வரும் 22ம் தேதி, இரவு 9:00 மணிக்கு குண்டையர்தண்டலம், மாரியம்மன் தெரு கூத்து நாடக மன்றத்தினரின் குறவஞ்சி நாடகம் நடக்கிறது.