Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மின்வசதி இல்லாத திருமுக்கூடல் பாலம்

மின்வசதி இல்லாத திருமுக்கூடல் பாலம்

மின்வசதி இல்லாத திருமுக்கூடல் பாலம்

மின்வசதி இல்லாத திருமுக்கூடல் பாலம்

ADDED : ஜூன் 07, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம்,திருமுக்கூடல்-பழையசீவரம்பாலாற்றின் குறுக்கே, 15 ஆண்டுகளுக்கு முன்கட்டிய பாலம் உள்ளது. திருமுக்கூடல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர், இந்த பாலத்தின் வழியாக வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒரகடம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

திருமுக்கூடல் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் கல் குவாரிகள் மற்றும் கிரஷர்களில் இருந்தும் இரவு, பகலாக இந்த பாலத்தின் மீது நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் இயங்குகின்றன.

இந்தபாலத்தின் மீது இதுவரை மின் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால்,இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. இதுகுறித்து, அப்பகுதி வாகன ஓட்டிகள் கூறியதாவது:

திருமுக்கூடல் பாலாற்று பாலத்தின் ஓரங்களில் மண் புழுதி மற்றும் லாரி சக்கரங்களில் படிந்தமண் குவிந்து கிடக்கின்றன. இந்த மண்ணால் மழை நேரங்களில் சாலை சகதியாக உள்ளது. மேலும், பாலத்தில் மழைநீர் வடிய வழியின்றி தேங்கி நிற்கிறது.

ஏற்கனவே மின்வசதிஇல்லாத நிலையில், பாலத்தின் மீது மழைநீர் தேங்குவது மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

எனவே, திருமுக்கூடல் பாலத்தின் மீது மின்வசதி ஏற்படுத்துவதோடு, மழைநீர் தேங்காமல் பராமரிக்க சாலையின் இருபுறமும் குவிந்த மண்ணை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us