/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம்
திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம்
திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம்
திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம்
ADDED : ஜூன் 08, 2024 05:30 AM
உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் பழமையான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, ஆண்டுதோறும் வைகாசி மாதம் தீமிதி உற்சவ திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா, கடந்த மே 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் உற்சவ விழாவில், தினமும் மூலவர் அம்மனுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது.
நேற்று காலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரவுபதி அம்மனுக்கு அர்ஜுனன் தாலி கட்டும் நிகழ்ச்சி மேள, தாளங்கள் முழங்க நடந்தது.
நாளை சுபத்திர திருமணம் நிகழ்ச்சியும், 10ம் தேதி அர்ச்சுனன் தபசு, 15ம் தேதி துரியோதனன் படுகளமும், 16ம் தேதி தீமிதி விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.