Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வெவ்வேறு விபத்தில் மூவர் பலி

வெவ்வேறு விபத்தில் மூவர் பலி

வெவ்வேறு விபத்தில் மூவர் பலி

வெவ்வேறு விபத்தில் மூவர் பலி

ADDED : ஆக 03, 2024 01:16 AM


Google News
Latest Tamil News
குன்றத்துார்:மாங்காடு காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன்,23; தனியார் ஊழியர். நேற்று முன்தினம் இரவு குன்றத்துார் - குமணன்சாவடி சாலையில்,'பைக்'கில் சென்றார்.

மாங்காடு பகுதியில் வேகமாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து, பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவராம கிருஷ்ணன், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

இன்ஜினியர் பலி


சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர், சதீஷ்,27; பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில், மென்பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, வேளச்சேரியில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு, தன் 'யமாஹா எப்.இசட்.,' பைக்கில் வீடு திரும்பினார்.

பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகர் சிக்னலை கடந்து சென்றபோது, எதிர் திசையில் வந்த,'டாடா ஏஸ்' வேன், இவரது பைக் மீது நேருக்குநேர் மோதியது.

இதில், தலையில் பலத்த காயமடைந்தவர் இறந்தார். பள்ளிக்கரணை போலீசார், வேன் ஓட்டுனரான பெரும்பாக்கத்தைச் சேர்ந்த திருமலை,42, என்பவரை கைது செய்தனர்.

பெண் பலி


சென்னை ஈக்காடு தாங்கலைச் சேர்ந்தவர் பழனி. இவர், தன் உறவினரான விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சத்தியமங்கலத்தைச் சேர்ந்த முனியம்மாள், 59, என்பவரை, பட்ரோடு பகுதியில் விட, தன் 16 வயது மகனை அனுப்பினார்.

அதன்படி இவரது மகன், 'பஜாஜ் பல்சர்' ரக பைக்கில் முனியம்மாளை அழைத்துச் சென்றார்.

பட்ரோடு, மான்போர்டு பள்ளி அருகே சென்றபோது, பின்னால் அமர்ந்திருந்த முனியம்மாள் தவறி கீழே விழுந்தார்.

பலத்த காயமடைந்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us