/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ திருக்கழுக்குன்றம் கோவிலில் யோகாவுக்கு அனுமதி மறுப்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு திருக்கழுக்குன்றம் கோவிலில் யோகாவுக்கு அனுமதி மறுப்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
திருக்கழுக்குன்றம் கோவிலில் யோகாவுக்கு அனுமதி மறுப்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
திருக்கழுக்குன்றம் கோவிலில் யோகாவுக்கு அனுமதி மறுப்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
திருக்கழுக்குன்றம் கோவிலில் யோகாவுக்கு அனுமதி மறுப்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
ADDED : ஜூன் 24, 2024 05:28 AM

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், வேதகிரீஸ்வரர் கோவிலின் மலையடிவாரத்தில் பக்தவத்சலேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் வளாக பகுதியில், தனியார் அமைப்பினர், சமய நிகழ்ச்சிகள், யோகா உள்ளிட்டவற்றை, கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று நடத்துவர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தனியார் அமைப்பினர், நேற்று காலை கோவில் வளாகத்தில் யோகா நிகழ்த்த, நிர்வாகத்திடம் அனுமதி கோரினர்.
அனுமதிப்பது குறித்து கோவில் நிர்வாகம் பரிசீலித்த நிலையில், இந்நிகழ்வு பா.ஜ., பிரமுகர் ஒருவர் ஏற்பாடு செய்து, அக்கட்சியின் சிறுபான்மை பிரிவினர் பங்கேற்பதாக, கோவில் நிர்வாகத்திற்கு தெரியவந்தது.
'வாட்ஸாப்' உள்ளிட்ட ஊடகங்களில், திருக்கழுக்குன்றம் பா.ஜ., பிரமுகர் படத்துடன் பகிரப்பட்டது. இதையடுத்து, உயரதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, யோகா நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனாலும், நிகழ்வில் பங்கேற்குமாறு, நேற்று முன்தினம் இரவு, சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டது. எனவே, அனுமதியற்ற நிகழ்வை அத்துமீறி நடத்த முயற்சிக்கலாம் என, கருதிய நிர்வாகத்தினர், திருக்கழுக்குன்றம் போலீசாரிடம் தெரிவித்தனர்.
போலீசார், நேற்று காலை 6:00 மணிக்கு, கோவிலின் நுழைவாயில் பகுதிகளில் முகாமிட்டனர். கிழக்கு வாயிலை மட்டும் திறக்கப்பட்டு, மற்ற வாயில்கள் மூடப்பட்டன.
ஆனால், எந்தவித அத்துமீறல் முயற்சியும் நடக்காத நிலையில், போலீசார் திரும்பிச் சென்றனர்.
கோவில் முன் போலீஸ் குவிப்பு குறித்து அறியாத பக்தர்கள், அதிர்ச்சியுடனேயே வழிபட்டு சென்றனர்.