/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வரும் 6ம் தேதி மாற்றுத்திறனாளி முகாம் துவக்கம் வரும் 6ம் தேதி மாற்றுத்திறனாளி முகாம் துவக்கம்
வரும் 6ம் தேதி மாற்றுத்திறனாளி முகாம் துவக்கம்
வரும் 6ம் தேதி மாற்றுத்திறனாளி முகாம் துவக்கம்
வரும் 6ம் தேதி மாற்றுத்திறனாளி முகாம் துவக்கம்
ADDED : ஜூன் 04, 2024 05:22 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டததில், லோக்சபா தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் முடியும் சூழல் இருப்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நாளை மறுதினம், துவங்க இருப்பதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதுாரை தொடர்ந்து, 13ல் காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கிலும், 20ல் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 27ல் குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, போட்டோ ஆகியவற்றுடன் பங்கேற்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.