/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ இருவருக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் இருவருக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர்
இருவருக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர்
இருவருக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர்
இருவருக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர்
ADDED : ஜூன் 21, 2024 10:25 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தில், குருப்- - 2ல் தேர்வான பணியாளர்கள் இருவருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவியாளர் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இவர்களுக்கான பணி நியமன ஆணையை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று வழங்கினார். உடன், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயகுமார், ஊரக வளர்ச்சி நேர்முக உதவியாளர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.