/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 650 மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலை 650 மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலை
650 மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலை
650 மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலை
650 மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலை
ADDED : ஜூன் 18, 2024 05:25 AM

திருப்பருத்திகுன்றம்: காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்பருத்திகுன்றம் ஊராட்சியில் சமணர் தலமான திரைலோக்யநாதர் ஜீன சுவாமி கோவில், சந்திரபிரபா தீர்த்தங்கரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளியூரில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் மற்றும் சுற்றியுள்ள சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது. எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், திருப்பருத்திகுன்றம் ஊராட்சியில் திரைலோக்யநாதர், சந்திரபிரபா தீர்த்தங்கரர் கோவில் சுற்றியுள்ள தெருக்களுக்கு, நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 650 மீட்டர் நீளத்திற்கு புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.