Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கிளார் கோவிலுக்கு விக்ரஹம் செய்ய பித்தளை பொருட்கள் வழங்கல்

கிளார் கோவிலுக்கு விக்ரஹம் செய்ய பித்தளை பொருட்கள் வழங்கல்

கிளார் கோவிலுக்கு விக்ரஹம் செய்ய பித்தளை பொருட்கள் வழங்கல்

கிளார் கோவிலுக்கு விக்ரஹம் செய்ய பித்தளை பொருட்கள் வழங்கல்

ADDED : ஜூன் 05, 2024 02:23 AM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கிளாரில் அகத்திய மாமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காஞ்சி மஹா பெரியவரால் பூஜிக்கப்பட்ட அறம்வளர் நாயகி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, 2018ம் ஆண்டு, நவ., 11ம் தேதி் கும்பாபிஷேகம் நடந்தது.

தற்போது இக்கோவிலில், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் விக்ரஹம் செய்ய கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர் அதன்படி பக்தர்களிடம் பழைய பித்தளை பொருட்களை உபயமாக பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் சிவானந்தம், 13 கிலோ எடையுள்ள பழைய பித்தளை உலோக பொருட்களை, கிளார் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சுவாமி விக்ரஹங்கள் செய்யும் பொறுப்பாளர் மோகன்ராஜிடம் நேற்று வழங்கினார்.

மேலும், இந்த விக்ரஹங்கள் செய்ய பழைய பித்தளை பொருட்களை உபயமாக வழங்க விரும்பும் பக்தர்கள் 96776 52396 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, விஸ்வ ஹிந்து பரிஷத், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us