/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாநில கூடைப்பந்து 54 அணி பலப்பரீட்சை மாநில கூடைப்பந்து 54 அணி பலப்பரீட்சை
மாநில கூடைப்பந்து 54 அணி பலப்பரீட்சை
மாநில கூடைப்பந்து 54 அணி பலப்பரீட்சை
மாநில கூடைப்பந்து 54 அணி பலப்பரீட்சை
ADDED : ஜூன் 18, 2024 05:58 AM

சென்னை, : மேயர் ராதாகிருஷ்ணன் கூடைப்பந்து கிளப் சார்பில், 20ம் ஆண்டு, மாநில கூடைப்பந்து போட்டி, எழும்பூரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்கிறது.
இரவில் நடக்கும் மின்னொளி ஆட்டமான இப்போட்டியில், லயோலா, இந்தியன் வங்கி, வருமான வரித்துறை, எஸ்.டி.ஏ.டி., உட்பட ஆண்களில் 38 அணிகள், பெண்களில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஆண்களுக்கான போட்டிகள் நாக் மற்றும் லீக்; பெண்களுக்கான போட்டிகள் நாக் அவுட் முறையில் நடக்கின்றன. இருபாலரிலும் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
நேற்று நடந்த ஆட்டத்தில், ஜவஹர் நகர் பி.சி., அணி, 83 - 79 என்ற கணக்கில் விக்னேஷ்வரா பி.சி., அணியையும், சென்னை பி.சி., அணி, 62 - 46 என்ற கணக்கில் எக்மோர் புல்ஸ் அணியையும் வீழ்த்தின.
பெண்களுக்கான போட்டியில் அரைஸ் அகடாமி அணி, 44 - 40 என்ற கணக்கில் ஒசைன் பி.சி., அணியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து, 22ம் தேதி வரை நடக்கின்றன.