/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஆலஞ்சேரியிலிருந்து காஞ்சி வரை நேரடி பேருந்து சேவை துவக்கம் ஆலஞ்சேரியிலிருந்து காஞ்சி வரை நேரடி பேருந்து சேவை துவக்கம்
ஆலஞ்சேரியிலிருந்து காஞ்சி வரை நேரடி பேருந்து சேவை துவக்கம்
ஆலஞ்சேரியிலிருந்து காஞ்சி வரை நேரடி பேருந்து சேவை துவக்கம்
ஆலஞ்சேரியிலிருந்து காஞ்சி வரை நேரடி பேருந்து சேவை துவக்கம்
ADDED : ஜூன் 14, 2024 10:05 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஆலஞ்சேரி, தோட்டநாவல், வளத்தோடு, குண்ணவாக்கம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர், காஞ்சிபுரத்திற்கு பேருந்து வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர்.
தங்களது கிராமங்களை ஒருங்கிணைத்து காஞ்சிபுரம் செல்ல நேரடி போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று, நெல்வாய் கூட்டுசாலையில் துவங்கி, ஆலஞ்சேரி, குண்ணவாக்கம், படூர் கூட்டுச்சாலை, மதுார், திருமுக்கூடல் மற்றும் வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகள் வழியாக காஞ்சிபுரம் செல்லும் வகையில் நேற்று முதல் பேருந்து சேவை துவங்கப்பட்டது.
உத்திரமேரூர் தி.மு.க. - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
மேலும், உத்திரமேரூர் ஒன்றியம், குண்ணவாக்கத்தில் இருந்து, சாலவாக்கம் வழியாக தடம் எண்;டி78 என்கிற அரசு பேருந்து செங்கல்பட்டு வரை இயங்குகிறது. இப்பேருந்தை குண்ணவாக்கம் அடுத்த, வாடாதவூர் வரை நீட்டிக்க செய்ய அப்பகுதியினர் கோரி வந்தனர்.
அதன்படி, வாடாதவூர் வரையிலான பேருந்து சேவையை நேற்று உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் துவக்கி வைத்தார். செங்கல்பட்டு போக்குவரத்து பேருந்து பணிமனை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.