/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ திருமணத்தில் பட்டாசு வெடித்ததால் விபரீதம் விளையாட்டு பொருட்கள் கடை தீக்கிரை திருமணத்தில் பட்டாசு வெடித்ததால் விபரீதம் விளையாட்டு பொருட்கள் கடை தீக்கிரை
திருமணத்தில் பட்டாசு வெடித்ததால் விபரீதம் விளையாட்டு பொருட்கள் கடை தீக்கிரை
திருமணத்தில் பட்டாசு வெடித்ததால் விபரீதம் விளையாட்டு பொருட்கள் கடை தீக்கிரை
திருமணத்தில் பட்டாசு வெடித்ததால் விபரீதம் விளையாட்டு பொருட்கள் கடை தீக்கிரை
ADDED : ஜூன் 03, 2024 06:07 AM

அம்பத்துார் : அம்பத்துார், சி.டி.எச்., சாலை, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே, யுவதயாளன், 45, என்பவர் 'தருணன் வேர்ல்டு' என்ற பெயரில், விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். யோகாவில் கின்னஸ் சாதனை செய்துள்ள இவர், தற்போது வெளிநாட்டில் உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, அவரது கடைக்கு அருகில் உள்ள மண்டபத்தில், திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
அதில், பட்டாசு வெடித்ததாகக் கூறப்படுகிறது. அதிலிருந்து வெளியேறிய தீப்பொறி, யுவதயாளன் கடையின் முன் வைத்திருந்த பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் மீது விழுந்தது.
இதில் தீப்பிடித்து, கடை முழுதும் பரவியது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அங்கிருந்து வெளியேறி தப்பினர்.
தீ விபத்தால், சி.டி.எச்., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், தீயணைப்பு வாகனங்கள், சம்பவ இடத்திற்கு வரத் தாமதமாகின.
அம்பத்துார், ஜெ.ஜெ.நகர், ஆவடி, வில்லிவாக்கம், மதுரவாயல் பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் தீக்கிரையாகின.
அதேபோல், அம்பத்துார் தொழிற்பேட்டை, தெற்கு பேஸ், 7வது தெருவில் உள்ள 'எசன்ஸ் ஹீட் டிரிட்டர்ஸ்' என்ற பெயரில், இரும்பு எக்கு கம்பெனியிலும், தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, மேற்கண்ட கடையில் தீயை அணைத்த வீரர்கள், தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு, இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இரும்பு எக்கு பொருட்கள் கூலண்டு ஆயிலில் குளிர்படுத்தும்போது, திடீரென தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இரு தீ விபத்துகள் குறித்து, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.