ADDED : ஜூன் 06, 2024 01:21 AM
காஞ்சிபுரம்:திருநங்கையருக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாக, பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முகாமில், அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், வரும் 21ல், திருநங்கையருக்காக நடைபெறும் சிறப்பு முகாமில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கையரும் பங்கேற்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.