/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தென் மண்டல குத்துச்சண்டை எஸ்.ஆர்.எம்., மாணவர் தகுதி தென் மண்டல குத்துச்சண்டை எஸ்.ஆர்.எம்., மாணவர் தகுதி
தென் மண்டல குத்துச்சண்டை எஸ்.ஆர்.எம்., மாணவர் தகுதி
தென் மண்டல குத்துச்சண்டை எஸ்.ஆர்.எம்., மாணவர் தகுதி
தென் மண்டல குத்துச்சண்டை எஸ்.ஆர்.எம்., மாணவர் தகுதி
ADDED : ஜூன் 11, 2024 04:54 AM

சென்னை : சென்னை மாவட்ட குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற எஸ்.ஆர்.எம்., மாணவர், தென் மண்டல போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு ஆதரவில், கர்நாடகா அமெச்சூர் குத்துச்சண்டை சங்கம் சார்பில், முதலாவது ஆண்களுக்கான எலைட் தென் மண்டல குத்துச்சண்டை போட்டி, இம்மாதம் 21ல் பெங்களூருவில் நடக்க உள்ளது.
இப்போட்டிகான தேர்வு போட்டிகள், சென்னை மாவட்ட குத்துச்சண்டை சங்கம் சார்பில், நேரு விளையாட்டு அரங்கில் கடந்த இரு நாட்கள் நடந்தன. இதில், 51, 57, 63.5, 71, 80, 92 மற்றும் 92 கிலோவிற்கு மேற்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம்., கல்லுாரி பி.எஸ்சி., மாணவர் ஜி.கபிலன் தங்கம் வென்று அசத்தினார். இந்த வெற்றியால், தென் மண்டல போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளார்.