/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூலை 16, 2024 12:50 AM

காஞ்சிபுரம் மாநகராட்சி 24வது வார்டு கே.எம்.வி., நகரில், 100க்கும் மேற்பட்ட வீடுகளும், வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியாக உள்ளது.
இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 10 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது.
துர்நாற்றத்துடன் வெளியேறும் கழிவுநீரால், கே.எம்.வி., நகரில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.மணிகண்டன், காஞ்சிபுரம்.