/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு
ADDED : ஜூன் 17, 2024 03:33 AM

செம்பரம்பாக்கம், : சென்னையின் குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் 6,300 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
இந்நிலையில், ஏரியின் நீர்வரத்து பகுதிகளான செம்பரம்பாக்கம், பழஞ்சூர், தண்டலம், மேவளூர்குப்பம், இருங்காட்டுக்கோட்டை உட்பட பல பகுதிகள் உள்ளன.
இப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், செம்பரம்பாக்கம் ஏரியின் உள்ளே பல ஆண்டுகளாக கலந்து வருகிறது.
தவிர, கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பை கழிவு, ஏரியின் உள்ளே கொட்டி தீ வைக்கப்படுகிறது. இதனால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது.
குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், ஏரியில் கலப்பதை தடுக்க, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.